முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தாய் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரமான மகன்களுக்கும், மகள்களுக்கும் என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.