தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி

புபனேஷ்வர்: நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.

all-citizens-in-the-country-to-get-free-covid-19-vaccine-sarangi
all-citizens-in-the-country-to-get-free-covid-19-vaccine-sarangi

By

Published : Oct 26, 2020, 7:37 PM IST

பிகார் மாநில தேர்தலுக்காக பாஜக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சியின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்தனர். மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், கோவிட்-19 தடுப்பூசியை நாட்டில் உள்ள அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஒடிசா மாநில உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர்பி ஸ்வைன் எழுப்பிய கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி பதிலளித்துள்ளார். அதில், '' நாட்டின் அனைத்து மக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்'' என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஒபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு; தமிழ்நாடு அரசின் மனு நிராகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details