லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் தப்பல் பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த திங்கள்கிழமை (டிச. 07) பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, அவர் அருகிலுள்ள தப்பல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சீமா என்ற ஆஷா தொழிலாளி, தலைமை செவிலி பிரீத்தி சிங்உதவியுடன் ஷாமாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
இது குறித்து பேசிய தலைமை செவிலி பிரீத்தி, "நள்ளிரவு சமயத்தில் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஷாமாசுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மருத்துவ குறிப்புகளைக் கொண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கவுள்ளன என எண்ணினோம்.
பிரசவத்தின்போது ஒருதலை மட்டுமே இயற்கையாக வெளியில் வந்தது. இதனால் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியில் எடுப்பது மிகுந்த சிரமத்திற்குள்ளானது.
பின்னர், சுமார் 2.10 மணிக்கு இரண்டு தலை, நான்கு கைகளுடன் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் தற்போது நலமாக உள்ளனர். ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பிரிக்க ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
குழந்தை குறித்த தகவல் அறிந்து, பலரும் அதிசயமாக உள்ள குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக, கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு இதயத்தின் துளை போன்ற குறைபாடுகள் அல்லது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை இரண்டாம் கட்ட ஸ்கேனிங்கில் கண்டறியலம். இதையடுத்து, கர்ப்பத்திலுள்ள குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வுசெய்வர்.
ஆனால், கர்ப்பம் மற்றும் ஸ்கேனிங் குறித்த போதுமான அறிவு, விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான மக்கள் இரண்டாம் கட்ட ஸ்கேனிங்கிற்குச் செல்வதில்லை. இதன் காரணமாக குழந்தைகள் பிறப்பதில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: நான்கு கால், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை!