இந்தியாவின் பொருளாதார நகராகத் திகழும் மும்பையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் பதற்றம் : ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கையால் பறக்கும் கருவிகளுக்கு தடை! - மும்பையில் பண்டகை காலத்தில் ட்ரோன் தாக்குத்ல
மும்பை : பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த 30 நாள்களுக்கு ட்ரோன்கள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் விமானங்கள் ஆகியவற்றுக்கு மும்பை காவல் துறை தடை விதித்துள்ளது.
குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் ட்ரோன் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்படக்கூடும் எனக் கூறியிருப்பதால், நகரத்தில் ட்ரோன்கள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் விமானங்கள் உள்ளிட்டவைக்கு மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தடை உத்தரவானது வரும் அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாநகரின் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.