மது அருந்தினால் கரோனா நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். இதனால், நுரையீரலில் ஏற்படும் பிரச்னைகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்துவருகின்றன. கவலை உணர்வு, நம்பிக்கையின்மை ஆகியவை தற்போது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. வேலைவாய்ப்பு, வணிகம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டுவருகின்றனர். அழுத்தம், கவலையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் மக்கள் மதுவை நாடி செல்கின்றனர். மது அருந்துபவர்கள் கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய அழுத்தத்திலிருந்து தப்பிக்க மேலும் மதுவை நாடிச் செல்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குறைந்த அளவு மது குடித்தாலும் தற்போதுள்ள சூழலில் இதய நோய் பிரச்னை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்
மது அருந்துவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுவாச அமைப்பில் வைரஸ் நோய் பாதிப்பு மது அருந்துவதால் அதிகரிக்கும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மோசமான நுரையீரல் பிரச்னை ஏற்படும். வென்டிலேட்டர்கள் மூலம் சுவாசித்தாக வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜியானி டெஸ்டினோ தெரிவித்துள்ளார். அதிகம் மது அருந்துவதால் ACE - 2 என்ற புரதத்தின் விகிதம் உடலில் அதிகரிக்கும். இதுகுறித்த ஆராய்ச்சி விவர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ACE - 2 புரதத்தால் மனித செல்களில் வைரஸ் எளிதாக நுழையும்.
மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பிரச்னைகள்
Aminobutyric என்ற அமிலத்தின் உற்பத்தி மது அருந்துவதால் அதிகரிக்கும். இதன்மூலம், மூளையில் நரம்பியல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளின் வேகம் குறையும். glutamate என்ற ரசாயனத்தின் மூலம் நரம்பியல் செயல்பாடுகள் இயல்பாக உள்ளது. ஆனால், மது பழக்கத்தின் மூலம் இது பாதிப்புக்குள்ளாகும். உடல், மூளை ஆகியவற்றின் வேகம் மது அருந்துவதால் குறையும். இல்லாத ஒன்று இருப்பது போன்ற உணர்வு, உடல் ஒத்துழைக்காமல் இருப்பது ஆகியவை மது பழக்கத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும். இந்த பழக்கம் அழுத்தத்தை குறைக்காமல், அதனை மேலும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் தொடர்ந்தால், மூளையின் மையப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். மது பழக்கத்தின் மூலம் Dopamine என்ற ஹார்மோன்கள் உடலில் அதிகம் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் மூலம் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களிடையே அதிகம் தோன்றும். இதுகுறித்து சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மன நலத்துறை பேராசிரியர் மைக்கேல் பார்ரேல் கூறுகையில், "மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே மக்கள் மது பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், மது அருந்துவதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும்" என்றார்.
ஊரடங்கின்போது வெளிநாடுகளில் அதிகரித்த மது விற்பனை