மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தின் நிலாங்கா தாலுகாவைச் சேர்ந்தவர் சிவாஜி லாலே. இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அப்பகுதியில் உணவகம் வைத்துள்ள லாலே கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துவருகிறார்.
பெண் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற குடிகார தந்தை - Strangulated his daughter
மும்பை: தொடர்ந்து அழுது கொண்டிருந்த காரணத்தால் தனது ஒரு வயது பெண் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
kill
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று சிவாஜி லாலே தனது வீட்டிலிருந்தபோது, அவரது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாலே பெற்ற மகள் என்றும் பாராமல் அக்குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
இதையடுத்து லாலேவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.