அலகாபாத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று லக்னோ விமானநிலையத்துக்கு வந்தார். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை எனக் காரணம் கூறி உத்தரப்பிரதேச காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஏர்போர்ட் விவகாரம்: ஆளுநரிடம் அகிலேஷ் மனு - மாயாவதியும்
லக்னோ: விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் மனு அளிக்க உள்ளார்.
Akil
அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கருத்து தெரிவித்திருந்தார். அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என மாயாவதி தனது டிவிட்டர் வலைதளத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் மனு அளிக்க உள்ளார். உத்தரப்பிரதேச அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிராக புகாரும் தெரிவிக்க இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.