எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், புதிய வேளாண் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக கூட்டணியில் 20 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது.
இதனை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை இயற்றியதை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியதை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்கட்சியினர், மக்களைத் தவிர்த்து ஆளுங்கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பு கூட இச்சட்டத்தை எதிர்க்கிறது. இதனால், மக்களின் கோபத்தை பாஜக சம்பாதித்துவருகிறது" என ட்வீட் செய்துள்ளார்.