உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே.19ஆம் தேதி நடைபெறுகிறது. இம்முறை மாயவதியின் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி, பாஜக, காங்கிரஸ் அல்லாத தலைமையை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பரப்புரை செய்து வருகிறது.
யோகி ஆதித்யநாத் உடன் பானிபூரி சாப்பிட்ட அகிலேஷ் யாதவ்?
லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்ற உருவம் கொண்ட நபருடன் பானிபூரி சாப்பிடும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், தற்போது உ.பி முதலமைச்சராக இருந்து வரும் யோகி ஆதித்யநாத் உருவத்தில் இருக்கும் நபருடன் அமர்ந்து விமானத்தினுள் பானிபூரியை சாப்பிடுவது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார். அந்த படத்தின் கீழ் முதலமைச்சர் மாளிகையில் இருந்து நான் வெளியேறிய பின், கங்கை நீரைக் கொண்டு அந்த வீட்டை சுத்தம் செய்த யோகி ஆதித்யநாத்திற்கு உணவளிக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுரேஷ் தாக்கூர் என்ற நபரே அகிலேஷ் யாதவ் உடன் உணவருந்தியவர் ஆவார். இவர், சமாஜ்வாதி கட்சியின் பொதுக்கூட்டங்களில் அதிகமாக காணப்படுவார்.