உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் முன்னாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அசாம்கர் தொகுதியில் போட்டியிடுவார் எனசமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
அகிலேஷ் யாதவ் அசாம்கர் தொகுதியில் போட்டி! - அசாம்கர்
லக்னோ: மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அசாம்கர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்கர் தொகுதியில் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த முறை முலாயம் சிங் யாதவ் மெயின்புர் தொகுதியிலும், சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் முகமது அசாம் கான் ராம்புர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
சமாஜ்வாதி கட்சிக்காக அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், அசாம் கான், டிம்பில் யாதவ், ஜெயா பச்சான் ஆகியோர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். 80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஏழுக் கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.