முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணிக்கும் அவரது மனைவி எலிசபெத் அந்தோணிக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை அவரது மகன் அனில் கே. அந்தோணி சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது தந்தை ஏ.கே. அந்தோணி, தாய் எலிசபெத் அந்தோணி ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கரோனா! - முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி
டெல்லி: முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தோணி
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. அவர்கள் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.
அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.