தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்தது - தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

டெல்லி: டெல்லி வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

By

Published : Feb 26, 2020, 6:20 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்துவந்த போராட்டம், கடந்த இரு தினங்களில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை ஒரு காவல் துறை அலுவலர் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துமனைக்குச் சென்று கலவரத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே, கலவரம் நடந்த ஜாஃபராபாத், சீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அஜித் தோவல் நிலைமை குறித்து அங்கிருந்த காவல் அலுவலர்களிடமும், பொதுமக்களிடமும் கேட்டறிந்தார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

தொடர்ந்து, டெல்லி கலவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து மத்தியப் பாதுகாப்புக் குழுவுடன் அஜித் தோவல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டெல்லி வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துணை காவல் ஆணையர், காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அஜித் தோவல், “வன்முறை வெடித்த இடங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. மக்கள் அச்சத்திலிருந்து வெளியேறி நிறைவான மனநிலையில் உள்ளனர்.

சட்ட அமலாக்க முகமை மீது அதிக நம்பிக்கை உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடக்காமல் காவல் துறையினர் பார்த்துக் கொள்வார்கள்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ’டெல்லி சகோதரர்கள் அமைதி காக்க வேண்டும்; விரைவில் அமைதி திரும்பும்’ - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details