தேவேந்திர ஃபட்னாவிஸும் அஜித் பவாரும் பதவியேற்ற அதே வேகத்தில், தங்களது பதவிகளை விட்டு விலகவும் செய்தனர். இதனால், நீண்ட நாள் அரசியல் குழப்பத்திற்கு விடிவு காலம் பிறந்தது. காங்கிரஸ்-என்சிபி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின் மூலம் கிடைத்த அசுர பலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனா. அதன்படி, இன்று மாலை 6:40 மணிக்கு மகாராஷ்டிராவின் 29ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து துணை முதலமைச்சர் பதவியேற்றுக் கொண்டு, பின் விலகிய தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், தற்போது மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவருக்கு இன்று பதவியேற்க விருப்பமில்லாததால், இன்னும் சில நாட்களில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.