தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ - சிவசேனா சஞ்சய் ராவத் கடும் தாக்கு! - maharashtra politics

மும்பை: அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும், பாஜக ஆட்சியமைத்ததற்கும் சரத் பவாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Ajit Pawar has backstabbed Maharashtra people, says shiv sena Sanjay Raut

By

Published : Nov 23, 2019, 10:22 AM IST

நிமிடத்திற்கு நிமிடம் மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தீர்ப்பளித்து கிட்டதட்ட ஒரு மாத காலமாகிய பின்னும் யார் முதலமைச்சர் என்ற இடியாப்ப சிக்கல் மட்டும் நீங்கவில்லை. இந்நிலையில், இன்று காலை தேவேந்திர ஃபட்னாவிஸூம் அஜித் பவாரும் அரவமின்றி முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இது இந்தியா முழுவதும் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் கூறுகையில், பாஜக ஆட்சிக்கு தன் கட்சி ஆதரவில்லை என்றும், அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவசேனாவின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், “பாஜக ஆட்சியமைத்ததற்கும் சரத் பவாருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இன்னமும் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் இருவரும் இன்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அஜித் பவார், சரத் பவாருக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டார்” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையும் படிங்க: ’இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ - ஒரே போடாக போட்ட சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details