தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2020, 9:25 PM IST

ETV Bharat / bharat

அஜித் ஜோகி - வாழ்க்கைப் பயணம் ஒரு பார்வை

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான அஜித் ஜோகி தனது 74ஆவது வயதில் இன்று காலமானார். அவர் குறித்த சுவாரஸ்சியமான தகவல்களின் தொகுப்பு இதோ...

Ajit Jogi
Ajit Jogi

  • சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி அஜித் பிரமோத் குமார் ஜோகி பிறந்தார்.
  • டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை மேற்கொண்ட அஜித் ஜோகி, மௌளானா ஆசாத் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் முடித்தார். அப்போதே கல்லூரி மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சிறிது காலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய ஜோகி, 12 ஆண்டுகாலம் மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.
  • 1986ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கினார்.
  • 1987ஆம் ஆண்டு மத்திய பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், காங்கிரஸின் பல்வேறு குழுக்களில் முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். 1995ஆம் ஆண்டு சிக்கிம் மாநில தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
  • 1988ஆம் ஆண்டு ராய்கர் தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2016ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அஜித் ஜோகி, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நிறுவினார்.
    ஆஜித் ஜோகி - வாழ்க்கைப் பயணம் ஒரு பார்வை

ABOUT THE AUTHOR

...view details