டெல்லியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலர்கள் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான எஃப்.ஏ.டி.எஃப்.இடமிருந்து பாகிஸ்தானுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக செயல்படுத்தத் தவறிவிட்டது' என்று பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டினார்.
'பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது' - அஜித் தோவல்! - Ajit Doval National Security Advisor
டெல்லி: சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு அமைப்பிடமிருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

ajit doval
தொடர்ந்து பேசிய அஜித் தோவல், "தங்கள் நாட்டின் கொள்கையாக பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப்பிடித்துவருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துவருகிறது என்பது நமக்கு நன்கு தெரியும். எனினும், சர்வதேச அளவில் அதை நிரூபிக்க நமக்குப் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அயோத்தியில் 144 தடை உத்தரவு!
Last Updated : Oct 14, 2019, 9:03 PM IST