டெல்லியின் பல்வேறு ரயில் தடங்களில் அமைந்துள்ள 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகளையும், குடிசைவாசிகளையும் அப்புறப்படுத்த வேண்டுமென ரயில்வே வாரியத்திற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார். அரசியல் காரணங்களால் அவற்றை அப்புறப்படுத்த இயலவில்லை என ரயில்வே அமைச்சகம் கூறிவந்த சூழலில், தற்போது உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ளும் முனைப்பில் டெல்லி அரசும், ரயில்வே வாரியமும் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், ரயில் தடங்கள் அருகில் அமைந்துள்ள 48 ஆயிரம் குடிசை வாழ்விடங்களை இடிக்க உத்தரவிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று (செப்டம்பர் 11) தாக்கல் செய்தார். அதில், "டெல்லி மாநகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகள் தொடர்பான வழக்கில் முன்னதாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், குடிசைவாசிகளுக்கு டெல்லி மாநகரத்தில் வாழும் உரிமை 100 விழுக்காடு இருக்கிறது.