தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : விசாரணை நிலவரம் குறித்து சிபிஐ அறிக்கை - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு சிபிஐ அமலாக்கத்துறை

டெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரும் குறித்து அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் இன்று டெல்லி நீதிமன்றத்தில்அறிக்கை சமர்ப்பித்தன.

Chidambaram, சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு
Chidambaram

By

Published : Feb 14, 2020, 6:41 PM IST

காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. மூன்று ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவி செய்துள்ளது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் இன்று அறிக்கை சமர்ப்பித்தன.

வழக்கின் விசாரணை முழுவீச்சில் நடந்து வருவதாக அமலாக்கத் துறை அதன் அறிக்கையில் கூறியுள்ளது. அதேசமயம், மலேசியாவில் விசாரணை செய்ய அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :உமர் அப்துல்லா தடுப்புக் காவல் - காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details