தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காற்றில் பரவும் கரோனா: இது ஒரு ஆபத்தின் சமிக்ஞை - காற்றில் பரவும் கரோனா

ஹைதராபாத்: காற்றில் கரோனா நோய்க் கிருமி பரவும் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியை அடுத்து பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

காற்றில் பரவும் கொரோனா
காற்றில் பரவும் கொரோனா

By

Published : Jul 20, 2020, 1:16 AM IST

கரோனா நோய்க் கிருமியானது தொடுவது, உமிழ்நீர் போன்றவற்றின் மூலம்தான் பரவும் என உலக சுகாதார அமைப்பு கூறிவந்தது. ஆனால், காற்று வாயிலாகவும் அது பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீபத்தில், உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி, கரோனா காற்றில் பரவும் என்று அறிவிக்க வலியுறுத்தினர். இதையடுத்து அமைப்பானது ஆய்வுகளை மேற்கொண்டது. இதையடுத்து புதிய அறிக்கையை அது வெளியிட்டது. அதில்,

  • காய்ச்சல், தும்மல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாத நபர்களாலும், பிறருக்கு கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அறிகுறிகளுடன் இருந்தாலும் இல்லாதபோதும் நோய்க் கிருமியைப் பரப்ப முடியும்

இது முக்கியமான அறிவிப்பாகும். ஆனால், தாமதமான அறிவிப்பாகும்.

ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு

மேலும் ஆறு முதல் ஒன்பது அடி வரையில் காற்றில் நோய்க் கிருமியின் நிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்க் கிருமியானது சற்று பெரிதாக இருப்பதாகவும், 5 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்கும் காற்று துகள்களின் மூலம் இந்த கொடிய நோய்க்கிருமியானது பரவ வாய்ப்பிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நாம் பின்பற்ற வேண்டியவை

  • ஒரே இடத்தில் குழுக்களாகக் கூடக் கூடாது
  • மின் தூக்கிகளை பயபடுத்த வேண்டாம்
  • வேறு நபர்களின் மூச்சுக் காற்றை சுவாசிப்பதை தவிர்த்திட வேண்டும்
  • சிறிதளவிலான முகக்கவசங்களை அணியக் கூடாது. மூக்கு, வாய் போன்ற பகுதிகள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்
  • துணியிலான முகக்கவசங்களை நன்கு துவைக்க வேண்டும்.
  • கைகளை கொண்டு முகக்கவசங்களை தொடுதல் கூடாது

ஒரு ஆய்வின்படி, 90 விழுக்காடு மக்கள் தங்களின் முகக்கவசங்களை எடுப்பதால்தான் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details