இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை பயணிகள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். "ரெட் பாஸ்" சலுகையின் கீழ் அடிப்படை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் அதே வேளையில், விமான நிலைய கட்டணம், கட்டணங்கள் மற்றும் வரி ஆகியவை விமான சேவை நிறுவனத்தினரால் ஏற்கப்படும்.
ஆயுதப்படை வீரர்களுக்கு அடிப்படை கட்டணமில்லா விமான சேவை வழங்கும் ஏர் இந்தியா ! - ஆயுதப்படை வீரர்களுக்கு அடிப்படைக் கட்டணமில்லாத விமான பயண சேவை
டெல்லி : சுதந்திர தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 50 ஆயிரம் ஆயுதப்படை வீரர்களுக்கு அடிப்படை கட்டணம் இல்லாத விமான சேவை வழங்கவுள்ளதாக ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டவுடன், ஏர் ஏசியா இந்தியா இயக்கம் குறித்த முழு விவரங்களும் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். ஏர் ஏசியா ரெட் பாஸ் ஒரு வழி விமானத்திற்கு முன்பதிவு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்னதாகவே செய்யப்பட வேண்டும். இந்த வாய்ப்பை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப் படையினர் மற்றும் பயிற்சி வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பிற நாடுகளிலும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விமான துறை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் பணப்புழக்கத்தைப் பாதுகாப்பதற்காக ஊதியக் குறைப்பு, ஊதியமின்றி விடுப்பு மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் போன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.