நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்குவுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்ஷ்தீப் பூரி தெரிவித்துள்ளார். 25ஆம் தேதிக்குப் பின்னர் படிப்படியாக முழு அளவில் விமான சேவை இயக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை - மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்ஷ்தீப் பூரி
17:07 May 20
டெல்லி: கரோனா லாக்டவுன் காரணமாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை வரும் 25ஆம் தேதியிலிருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து விமான நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதன்காரணமாக பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து முற்றிலும் செயல்படவில்லை.
இந்நிலையில், சுமார் இரண்டு மாத காலத்திற்குப்பின் தற்போது மீண்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மட்டும் படிப்படியாகத் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:39 நகரங்களில் தனது பைக் டாக்ஸி சேவையைத் தொடங்கிய ராபிடோ!