வடமாநிலங்களில் காற்றின் மாசு அபாய நிலையைத் தாண்டியதைத் தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகச் செயலாளர், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு இடையே உயர் அலுவல் கூட்டம் நடந்தது. எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி.கே. மிஸ்ரா, "காற்றின் தரத்தை சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் டிசம்பர் 21ஆம் தேதி வரை கண்காணிக்கும். மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.