டெல்லியில் குளிர்காலம் தொடங்கினாலேயே காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, தூசி ஆகியவற்றுடன் வேளாண் கழிவுகளை எரிப்பதால் வரும் புகையும் இணைந்துகொள்வதால் டெல்லியில் காற்று மாசு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், டெல்லியுள்ள ரோஹினி என்ற பகுதியில் காற்று தர மதிப்பீடு 346ஆகவும், ஆர்.கே. புரத்தில் 329ஆகவும், ஆனந்த் விஹாரில் 377ஆகவும் முண்ட்காவில் 363ஆகவும் பதிவாகியுள்ளது.
அபாய கட்டத்தை நெருங்கியுள்ள காற்று மாசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'Red Light On, Gaadi Off' என்ற பரப்புரையை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.