டெல்லி: தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு குறைந்து காற்றின் தர அளவு செவ்வாய்க்கிழமை கணிசமாக மேம்பட்டது. இதனால், நகரத்தின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டு (AQI) திருப்திகரமாக காணப்பட்டன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, கடந்த சில நாள்களாக ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீட்டு 173 ஆகவும், லோதி சாலை 121, ஆர்.கே.புரம் மற்றும் நஜாப்கர் முறையே 205 மற்றும் 213 என காற்று மாசுபாடு பதிவாகி இருந்தது.
இது தீபாவளியில் பட்டாசுகளின் பயன்பாடு காரணமாக உயர்ந்தது. இது குறித்து நகரவாசிகள் கூறுகையில், "சமீபத்திய மழை காற்றின் தரத்தை அதிகரிக்க உதவியது. முன்னர், எங்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் இருந்தது, ஆனால் தற்போது இல்லை” என்றனர்.