டெல்லி: தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க தடை இருந்தபோதிலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடித்ததால், காற்று மாசு மிகவும் மோசமடைந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தடைக்கு வெடிவைத்து சிதறவிட்ட மக்கள்! டெல்லியை சூழ்ந்த காற்று மாசு! - டெல்லி காற்று மாசு அளவு
தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக தீபாவளி அன்று, பட்டாசுகளை வெடிக்க அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும், மக்கள் விதியை மீறி பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடியதில், காற்று மாசின் அளவு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
new
காற்று மாசு துகள் பிஎம் 2.5 அளவீட்டில், ஆனந்த் விகார் பகுதியில் காற்று மாசு குறியீட்டின் அளவு 481ஆகவும், விமான நிலையம் பகுதியில் 444ஆகவும், ஐடிஓ பகுதியில் 457, லோதி சாலை பகுதியில் 414ஆகவும் இருந்தது.
டெல்லி முழுவதிலும், பட்டாசு வெடிக்க தடை இருந்தபோதிலும், மக்கள் தடைகளை மதிக்காமல் பட்டாசுகளை வெடித்ததும், சுற்றுபுற கிராமங்களில் விவசாய உதிரிகளை எரித்ததும் காற்று மாசு மிகவும் மோசமடைய காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Last Updated : Nov 15, 2020, 1:08 PM IST