தேசிய தலைநகரான டெல்லியில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்த வரலாறு காணாத மாசு காரணமாக டெல்லியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் அறிவித்துள்ளார்.
ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதன் காரணமாக டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துவருகிறது. இந்தியா கேட் உட்பட டெல்லியின் பல முக்கிய இடங்களில் காற்று மாசு கடுமையாக உள்ளது.