டெல்லி:கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அந்த ஊரடங்கில் டெல்லியும், அதன் அண்டை மாநிலங்களும் கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்தியதையும் மீறி காற்று மாசுபாடு கட்டுப்பாடு உள்ளிட்ட சில நன்மைகளைப் பெற்றன.
டெல்லி, அதன் அண்டை மாநிலங்களில் ஊரடங்கின் போது காற்று மாசு திருப்திகரமான நிலையிலேயே இருந்துவந்தது. ஆனால், கரோனா அச்சம் தணிந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முற்பட்டனர். இது டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை வெகுவாக பாதித்தது.
டெல்லியில் குளிர் காலம் நிலவுவதால் காற்று மாசுபாட்டின் தீவிரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் முதியவர்களும் குழந்தைகளும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இவை தொற்று நோய்களைத் தீவிரப் படுத்தியதுடன், புதிய நோய்களுக்கும் வழிவகுத்தது.
டெல்லியில் காற்றை மாசுபடுத்தும் மிக முக்கிய காரணி லாரி போக்குவரத்து. இவை ஊரடங்கு காலங்களில் 97 விழுக்காடு குறைக்கப்பட்டதால், மாசுபாடு குறைந்தது. மே 18ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை, காற்று மாசு 'மிதமான' அளவிலேயே இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, மழைக்காலம் தொடங்கியதினாலும் மாசுபாட்டின் அளவு கட்டுக்குளேயே இருந்தது.