தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2020, 8:58 AM IST

ETV Bharat / bharat

எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும் - ஏர் மார்ஷல் எச்.எஸ். அரோரா

டெல்லி: ஒருங்கிணைந்த ஆயுதங்கள் துப்பாக்கிச் சூடு 2020 பயிற்சியின் ஒரு பகுதியாக ஆந்திரா மாநிலம் சூர்யலங்காவில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை விமான பணியாளர்களின் (வி.சி.ஏ.எஸ்.) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எச்.எஸ். அரோரா பார்வையிட்டார்.

Air Marshal HS Arora witnesses Combined Guided Weapons Firing
Air Marshal HS Arora witnesses Combined Guided Weapons Firing

ஒருங்கிணைந்த ஆயுதங்கள் துப்பாக்கிச் சூடு 2020 பயிற்சி நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை ஆந்திரா மாநிலம் சூர்யலங்காவில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை, ரஷ்யாவின் குறுகிய தூர இக்லா ஏவுகணை ஆகியவற்றைக் கொண்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. போர்க்குழுவினருக்கு யதார்த்தமான பயிற்சியை வழங்கும் எக்ஸ்பென்டபிள் வான்வழி இலக்கு (மீட்) இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது.

கரோனா தொற்றுநோயின் சவாலை நாடு தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நிலையில், இந்திய விமானப்படை அதன் செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

விமான வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விமான பணியாளர்களின் (வி.சி.ஏ.எஸ்.) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எச்.எஸ். அரோரா, கரோனா அச்சுறுத்துலுக்கு இடையே முன்னெச்சரிக்கைகளுடன் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்வதற்கு அலுவலர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

ஒருங்கிணைந்த ஆயுதங்கள் துப்பாக்கிச் சூடு 2020 பயிற்சியில் கற்றுக்கொண்ட பாடங்களையும் எதிர்வரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பயன்படுத்த அனைத்து விமான வீரர்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில்கள்!

ABOUT THE AUTHOR

...view details