ஏர் இந்தியா விமானம் தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் இதனை தெரிவித்தார். இதுமட்டுமின்றி மற்றுமொரு கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அப்போது அவர் சிறிது நேரம் இடைவெளி எடுத்துக் கொண்டார்.
பின்னர் பேசிய ஹர்தீப் சிங், '' இது கடினமானது. இருப்பினும் நான் சொல்கிறேன். ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடியாவிட்டால், அதனை மூட வேண்டிய நிலை வரும்'' என்றார்.
ஏர் இந்தியாவின் முழு பங்குகளையும் விற்க ஏல ஆவணத்தை அரசாங்கம் தயார் செய்து வருகிறது. அதற்கான முதலீடு காலக்கெடுவாக மார்ச் 31ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. முந்தைய முயற்சியில், பிரதமர் மோடி அரசாங்கம் 2018 மே மாதத்தில், தனது 76 விழுக்காடு பங்குகளை விற்க முயற்சித்தது.
ஆனால், ஒரு தனியார் நிறுவனமும் ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது, ஏலச் செயற்பாட்டைத் தொடங்குவதற்கு முன்னர், உயர் மட்ட விமான அமைச்சக அதிகாரிகளும், ஏர் இந்தியத் தலைவர் அஸ்வானி லோகானியும் தற்போது முதலீட்டாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
'ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்காவிட்டால், மூட வேண்டிய நிலை வரும்' - மத்திய அமைச்சர் தகவல்!
டெல்லி: தேசிய விமான சேவையான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்காவிட்டால், அதை மூட வேண்டியிருக்கும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
Air India to be closed if privatisation bid fails: Minister
ஹர்தீப் பூரி, கடந்த வாரம் ஏர் இந்தியா தொடர்பான அமைச்சர்கள் குழுவைச் சந்தித்து சில முடிவுகளை எடுத்ததாகக் கூறியிருந்தார். தனியார்மயமாக்கலை அடுத்து விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் கேட்டதற்கு, அமைச்சர் எதிர்மறையாகப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: இந்திய அரசியலில் சொகுசு விடுதிகள்.!