கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வர, மத்திய அரசு சார்பாக 'வந்தே பாரத்' என்ற மிஷன் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் 7.73 லட்சம் மக்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த மிஷனில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் முன்னணியில் நின்று பணி செய்தனர்.
இந்த நிலையில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மத்திய அரசு 70 முதல் 75 விழுக்காடு வரை ஊதியக் குறைப்பு செய்ய முடிவு எடுத்துள்ளது. அதேபோல் சில ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியாவைச் சேர்ந்த விமானிகள் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ''மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்திற்காக விமான ஊழியர்கள் பெரும் விலையைக் கொடுத்துள்ளார்கள். இதுநாள் வரை வந்தே பாரத் திட்டத்தில் ஈடுபட்ட 60 விமானிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் விமான ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு, கட்டாய விடுப்பு நடவடிக்கைகள் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னதாக எடுத்தபோது, பெரும் விளைவைச் சந்திக்க நேரிட்டுள்ளது. ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் விமான ஊழியர்களின் குடும்பங்களிலும் பாதிப்பைச் சந்திக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாரத் மிஷன் மூலமாக இதுவரை 6.87 லட்சம் பேர் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல்!