இது குறித்து இந்திய செயல்பாட்டு விமானிகள் சங்கம் (ஐசிபிஏ) தரப்பில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு, சேவை விதிகளை மீறியதற்காக 50 விமானிகளை சட்ட விரோதமாக நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ட்விட் செய்துள்ள ஐசிபிஏ, "என்ன நடக்கிறது? முறையான நடைமுறை பின்பற்றப்படாமல் எங்கள் விமானிகளில் 50 பேர் ஒரே இரவில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கரோனா காலத்தில் முதற்களத்தில் போராடியர்களை நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.