ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கி தவித்துவந்த நிலையில் தன் பெரும்பாலான சேவைகளை ஏப்ரல் 7ஆம் தேதியுடன் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில், விமான பயணிகள் விமான சேவைகளுக்கு பெரிய தொகையினை கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
அதிரடி சலுகைகளுடன் களமிறங்கும் ஏர் இந்தியா! - ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: கடை நிமிடத்தில் பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கு அதிரடி சலுகைகளை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகளை தன் பக்கம் இழுக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. முன்னதாக, ஏர் இந்திய அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடை நிமிடத்தில் பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடைசி மூன்று மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு பதிவுகளுக்கு பெரிய அளவில் விலை குறைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. முன்னதாக பயணிகள் கடைசி நிமிட பயணத்திற்காக சாதாரண விலையை விட 40 விழுக்காடு அதிகமாக கொடுத்து பயணச் சீட்டினை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.