முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழா இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத் தளபதி பிபின் ராவத், புதிய விமானப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் சிங் பதோரியா, கப்பற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விமானப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு விமானப்படை சார்பில் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதிகள்! - இந்திய விமானப்படை 87ஆவது ஆண்டு விழா
டெல்லி: இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழாவையொட்டி டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்தில் முப்படைத் தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
iaf
இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டான் விமானப்படைத் தளத்தில் பழங்கால மற்றும் நவீன கால போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.