அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுதாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மனு வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தரப்பில் ட்விட்டர் பக்கத்தில், “பாபர் மசூதி வழக்கில் நாங்கள் மறுஆய்வு மனுதாக்கல் செய்ய உள்ளோம். உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்தின் முடிவு, எங்களை பாதிக்காது. முஸ்லிம்கள் ஒரு அணியில் உள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மனுதாக்கல் செய்ய முடிவு.!
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய போவதில்லை என உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியானது. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளும் ஒரே கருத்துடைய தீர்ப்பை வழங்கினார்கள். அதன்படி அயோத்தியில் ராம ஜென்ம பூமியாக கருதப்படும் இடத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலமும் ஒதுக்க கோரி தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: ராம் பெயரிட்ட 51,000 செங்கற்களை செருப்புக்கூட அணியாமல் தயாரிக்கும் அயோத்தி ஊழியர்கள்!