கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது தந்தை கே.கே.சிங்கின் வேண்டுகோளை ஏற்று உச்ச நீதிமன்றம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சுஷாந்த் சிங்கின் உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவானது, தனது இறுதி ஆய்வறிக்கையை சி.பி.ஐ.யிடம் இன்று ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுக் குழுவின் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா, " அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தடயவியல் துறையின் மருத்துவர் குழு மேற்கொண்ட உடற்கூறாய்வு பரிசோதனையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இறப்பு கொலையால் ஏற்படவில்லை.