புதுச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதிமுதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நான்காவது நாளான நேற்று (அக். 1) அந்தக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் சேஷாசலம் தலைமையில் ஆசிரியர்கள் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.