காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மீண்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் முழுநேரத் தலைமை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.
அந்த கடிதத்தில், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டு இருந்தனர்.
அந்த அதிருப்தி கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பலரும் தற்போது மறுசீரமைப்பில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இருந்து நீக்கப்பட்டு, தாரிக் அன்வர் நியமனம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் அன்வர் காங்கிரஸ் கட்சியின் அரசியல் திட்டங்கள் குறித்து ஈடிவி பாரத்துடன் மனந்திறந்து பேசியுள்ளார்.
அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னை குறித்து கமிட்டி தீவிரமாக பார்வையை செலுத்தி வருகிறது.