புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக...! - புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்
புதுச்சேரி: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் வெளிய வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன்; " கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன் கருதி வேலை வாய்ப்பு, உயர்கல்விகளில் 10% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. புதுச்சேரி அரசுக்கு, 37 இடங்களை அரசு கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதலாக அனுமதித்தது. ஆனால் 37 இடங்களில், புதுச்சேரி அரசானது தங்களுக்கு வேண்டிய மாணவர்களைக் கொண்டு நிரப்பி உள்ளது. அதே போல், ஜெயில் வார்டன் தேர்விலும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அவரவர்கள் கருத்துகளை கேட்டு 10% இடஒதுக்கீடு சம்மந்தமாக முடிவு எடுத்தார்.ஆனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசானது, 10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, ஆனால் தற்போது அப்படியொருச் சட்டத்தை அமுல்படுத்தவில்லை என்று பொய் கூறி வருகிறது என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தோம்" இவ்வாறு கூறினார்.