சாய்பாபா பிறப்பிட சர்ச்சை குறித்து விவாதிக்க தாக்கரே, சியாத்ரி விருந்தினர் மாளிகையில் ஷிரடி உள்ளூர்வாசிகள், கோயில் அறங்காவலர்கள் ஆகியோர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது சாய்பாபாவின் பிறப்பிடமாக பத்ரி என்று கூறிய தனது கருத்தை உத்தவ் தாக்கரே திரும்பப்பெற்றுக்கொண்டதாகவும், இதனால் ஷிரடியிலிருந்து வந்த தூதுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தில் ஷிரடி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணா வி.கே. பாட்டீல் கலந்துகொண்டார். முதலமைச்சருடனான கூட்டத்திற்குப் பிறகு வி.கே. பாட்டீல், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் திருப்தியடைந்துள்ளனர் எனக் கூறினார்.