அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தின் மருமகன் ரதுல் பூரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ரதுல் பூரியை கைது செய்யக்கூடாது: டெல்லி நீதிமன்றம்
புதுடெல்லி: அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தின் மருமகன் ரதுல் பூரியை, வரும் 29ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தவிட்டுள்ளார்.
அதன்படி, அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்திருந்த ரதுல் பூரியை காத்திருக்குமாறு அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பூரி அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் அவருக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி ரதுல் பூரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.