புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில கவுன்சில் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன்
புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு சங்கத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் பாலசுந்தரம், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்கில் 'இத்திட்டம் நிலங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இதனை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். மக்களிடம் கருத்துக்கேட்பு ஒப்புதலின்றி எவ்வித வேலையும் தொடங்க மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. புதுச்சேரியின் பாரம்பரிய சின்னங்களான அரிக்கமேடு, காரைக்கால் அருகே உள்ள பூம்புகார் உள்ளிட்ட தொன்மை சின்னங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி, தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.