தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சசிகலா நடராஜனின் கோரிக்கை மறுப்பு? - சொத்துக்குவிப்பு வழக்கு

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய சசிகலா நடராஜனின் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் மறுதலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா நடராஜனின் கோரிக்கையை மறுதலித்த சிறை நிர்வாகம்!
சசிகலா நடராஜனின் கோரிக்கையை மறுதலித்த சிறை நிர்வாகம்!

By

Published : Dec 8, 2020, 6:14 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியோடு முடிவடைவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்திற்கான 4 வரைவோலைகளை பெங்களூருவில் உள்ள 34ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நவ.17ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ரசீதை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கும் நவ.18ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.

சிறை விதிகளின் படியும், நன்னடத்தை அடிப்படையிலும் வரும் 2021 ஜனவரி 27ஆம் தேதியன்று தன்னை விடுவிக்க வேண்டுமென கடந்த 2 ஆம் தேதியன்று சிறை அலுவலர்களிடம் சசிகலா நடராஜன் கோரிக்கை விடுத்திருந்தார். சசிகலா நடராஜனின் விண்ணப்பத்தை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் இன்று மறுதலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஊழல் வழக்கில் சசிகலா இதுவரை இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலா நடராஜனின் கோரிக்கையை மறுதலித்த சிறை நிர்வாகம்!

இவ்வழக்கில் அவர் முன்னதாகவே 19 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவற்றைக் கழித்துவிட்டு கணக்கிட்டால் வருகிற 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசு விடுமுறை நாள்கள் சிறைக் கைதிகளுக்கும் பொருந்தும் என்றபோதும், ஊழல் உள்ளிட்ட சில குற்றங்களில் தண்டனைப்பெறும் குற்றவாளிகளுக்கு விடுப்பு நாள்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சிபிஎம் முத்திரையுடன் மாஸ்க் அணிந்த வாக்குச்சாவடி அலுவலர் பணி நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details