தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதித்த மகன்... சொந்த மருத்துவமனையில் ரகசியமாக பதுக்கிய மருத்துவர்!

ஆக்ரா: மகனுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து தனது மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சையளித்த மருத்துவர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ே்
ே்ே்

By

Published : Mar 28, 2020, 12:08 AM IST

உலகை மிரட்டும் கரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கனோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் மருத்துவர் ஒருவர், துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய தனது மகனுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை கண்டுப்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து, ஆக்ரா - டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் மகனை ரகசியமாக அனுமதித்து சிகிச்சையளித்து வந்துள்ளார். இந்த தகவல் பரவத் தொடங்கியதையடுத்து, சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காமல் ஏமாற்றிய மருத்துவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை மூத்த ஆய்வாளர் கூறுகையில், "கரோனா நோயாளியை மறைத்து அனைத்து மக்களின் உயிர்களையும் பணயம் வைக்க முயன்ற மருத்துவர் மீது மூன்று பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!

ABOUT THE AUTHOR

...view details