தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பெரியளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்! - militaints planning

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் நாட்களில் பயங்கரவாதிகள் பெரியளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Jammu

By

Published : Mar 12, 2019, 11:33 AM IST

இது குறித்து புலனாய்வுப் பிரிவு மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், உளவுத் துறை கொடுத்த தகவலின்படி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பெரியளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்புப் படை பற்றி அவர் கூறுகையில், 'உளவுத் துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில், ஒன்று பொது புலனாய்வுப் பிரிவு, மற்றொன்று சிறப்பு புலனாய்வுப் பிரிவு. இதில்,

பொது புலனாய்வுப் பிரிவானது பயங்கரவாதி குழுக்களை கையாளும் விதங்கள், ஊடுருவல்களை கண்டறியும் பணிகளை செய்கிறது.

சிறப்பு புலனாய்வுப் பிரிவானது, தாக்குதல்கள் எங்கு, எப்போது நடைபெறுகிறது என்பன போன்ற செயல்பாடுகள் குறித்து தகவல்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் பணியை செயல்படுத்துகிறது.

தற்போது, எங்களுக்கு பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களுக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தேவை இருக்காது' என தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய பெரும்பாலான தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் நேற்று அளித்த பேட்டியில்,

'கடந்த மூன்று வாரமாக, நாங்கள் 18 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளோம். அதில், 10 பேர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், எட்டு பேர் உள்ளுரைச் சேர்ந்தவர்கள்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தாக்குதலுக்குப் பிறகு ராணுவம், மற்ற பாதுகாப்புப்படை முகவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

உளவுத் துறை தந்த தகவலின்படி, வரும் நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது தனியாக பெரிய தாக்குதல் நடத்த திட்டுமிட்டுள்ளதாகவும், அல்லது பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உதவியுடன் தாக்குதல் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details