உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனாவை எதிர்கொள்ள ஏழை எளிய மக்களுக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு விலையில்லா ரேஷன் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து இந்த கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், நரேந்திர சிங் தோமர், ராம் விலாஸ் பாஸ்வான், பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாட்டு மக்களுடன் பிரதமர் ஆற்றிய உரையில், இந்த திட்டம் ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டம் குறித்தும், அதனை மேலாண்மை செய்வது மற்றும் செயல்படுத்துவது பற்றி விவாதம் நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த ஐந்து மாத காலப்பகுதியில், 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை சென்றடைய உள்ள இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 90,000 கோடி வரை செலவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இதற்காக ரூ. 1.5 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.