மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க 104 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், அக்கட்சி அங்கு ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியான நிலையில், பாஜக தனது பார்வையை ராஜஸ்தான் மாநிலத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா, கமல் நாத் ஆகியோருக்கிடையே பனிப்போர் நீடித்து வருவதுபோல், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பிரச்னை இருந்து வருகிறது.
வைர வியாபாரி ராஜிவ் அரோராவை மாநிலங்களவைக்கு அனுப்ப அசோக் கெலாட் விரும்பினார். ஆனால், கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்த்து, மற்றவர்களை மாநிலங்களவை உறுப்பினராக்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனக் கூறி, அதற்கு சச்சின் மறுப்பு தெரிவித்தார்.