சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தான் செல்லும் நதிகளை தடுப்பேன். 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருக்கும் நதிநீரை தடுத்து ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்ப்பேன் எனப் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
மேற்கு நோக்கி பாயும் நதிகள் மீது எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மேற்கு நோக்கி பாயும் நிதிகளை தடுத்தாலோ அல்லது அதன் வழியை முடக்க முயற்சித்தாலோ அது ஆக்கிரமிப்பு தான் என்றும், அந்த நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை உள்ளது எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைஸல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைஸல் பேசுகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கி பாயும் நதிகளின் மீது எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. அதனை தடுக்கவோ அல்லது அந்த நிதிகளின் வழிகளை மாற்ற முயற்சித்தாலோ அது நிச்சயம் ஆக்கிரமிக்கும் செயல்தான். அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: ‘பாகிஸ்தான் செல்லும் நதிநீரை நிச்சயம் தடுப்பேன்’ - பிரதமர் நரேந்திர மோடி