தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிரடியில் இறங்க இருக்கும் மகாராஷ்டிரா? - அதிரடியில் இறங்கிய மகாராஸ்டிரா

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Maharashtra
Maharashtra

By

Published : Jan 19, 2020, 2:36 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மேர் கூறுகையில், "எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் பாலாசாகேப் தோரா குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து கூட்டணி கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் முடிவு செய்வார்கள். இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், "குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு உரிமையுண்டு. அரசியலமைப்புக்கு உட்பட்டதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தால், அதை எதிர்ப்பது பிரச்னைக்குரியதாகிவிடும்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை கேரளா அரசு அணுகியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநரின் அரசியல் வார்த்தைகளுக்கு தேசாபிமானி நாளேடு கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details