கோவிட்-19 தடுப்பூசி: கர்நாடக மாநிலம் முதலிடம்! - latest national news
மத்திய அரசு தகவலின்படி, இதுவரை சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதில், கர்நாடக மாநிலம் (80,686) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலம் (69,405) இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
corona vaccine latest updates
By
Published : Jan 20, 2021, 3:37 PM IST
பெங்களூரு (கர்நாடகம்): இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கர்நாடக மாநிலத்தில் இதுவரையில் 80 ஆயிரத்து 686 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் 69 ஆயிரத்து 405 பேருக்கும், ஆந்திர மாநிலத்தில் 58 ஆயிரத்து 495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
“மக்கள் அனைவரும் பயமில்லாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். இந்தியாவில் போடப்படும் தடுப்பூசி பாதுகாப்பானது” என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை கீழ்வருமாறு: