தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திக்விஜய் சிங் போட்ட ட்வீட் - முதலமைச்சர் கமல்நாத் அதிரடி அறிவிப்பு! - முதலமைச்சர் கமல்நாத் அறிவிப்பு

மத்தியப் பிரதேசம்: போபால் பகுதிகளில் சாலையோரம் சுற்றித் திரியும் 3000 மாடுகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

kamal nath

By

Published : Oct 12, 2019, 2:19 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "போபால் பகுதியின் நெடுஞ்சாலைகளில் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், வெளியூர் பயணத்திற்கு செல்லும் மக்கள் மிகந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே முதலமைச்சர் கமல்நாத் இதுகுறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

மனிதர்களைப் போன்று மாடுகளையும் சாலை விபத்திலிருந்து காக்க வேண்டும் இதற்கு முதலமைச்சரிடம் என்ன திட்டம் இருக்கிறது" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சாலையின் நடுவே நூற்றுக்கு அதிகமான மாடுகள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கமல்நாத். '2020ஆம் ஆண்டிற்குள் 3000 மாடுகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும். மாடுகளைக் காக்க புதுமையான பாதுகாப்பு திட்டங்களும் வெளிவர இருக்கிறது. ஒவ்வொரு நகரத்திலும் செயல்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்று திக் விஜய் சிங்கிற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details